7 வருட காதல்… காதலியை படிக்க வைத்த காதலன் : பட்டம் வாங்கிய காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்.. நின்று போன திருமணம்… காதலன் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 1:51 pm
Youth Suicide - Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனம் அருகே 7 வருடமாக காதலித்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் வேறு ஒருவருடன் சென்று திருமணம் செய்ததை தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாதி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ந.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு என்பவரது மகன் குமரேசன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த குமரேசன் உறவினர்கள், குமரேசனின் உறவினர் பெண் ஒருவருக்கும் குமரேசனுக்கும் அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருப்பினும் குமரேசன் மனமுடைந்த நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி குமரேசன் தனது விவசாய நிலத்திற்கு சென்ற நிலையில், அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .

இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிநத வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது குமரேசன் இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில் தன்னை காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டு ஓடிச்சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை மறந்தாலும் பழகிய நினைவுகள் மறக்க முடியவில்லை.

நான் பதிவிடும் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிடுமாறு அப்போதாவது இதுபோன்ற பெண்கள் இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பார்கள் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Views: - 169

0

0