இந்த வயதிலும் இப்படியா? அமைச்சர் பொன்முடியை பார்த்து மிரண்டு போன தொண்டர்கள் : சளைக்காமல் போட்டா போட்டி போட்ட மகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 1:07 pm
Ponmudi and his son - Updatenews360
Quick Share

விழுப்புரம் : இந்த வயதில் அமைச்சர் பொன்முடி இப்படி அடிக்கிறார் என்று மிரண்டு போன தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.

விழுப்புரத்தில் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி நற்பணி மன்றம், மாவட்ட இளைஞரணி, விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் இறகுபந்து போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முன்னதாக காட்சி போட்டி ஒன்றியில் எதிரெதிர் அணியில் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியும், இவரது மகன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணியும் இறகு பந்து விளையாடினார்.

ஒரு கட்டத்தில் இருவரும் சளைத்தவர்களல்ல என நிரூபிப்பதற்காக விளையாடும் போது அமைச்சர் பொன்முடி இந்த வயதிலும் இப்படி விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்க்காத அளவு விளையாடினார். இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மிரண்டு போய் பார்த்ததோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் இந்த இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கௌதமசிகாமணி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

Views: - 100

0

0