ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள்… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவர்கள் : மனதை உருக வைத்த காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 8:24 am

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுமிகளை நீச்சல் அடித்துக் கொண்டு சிறுவர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விழுப்புரம் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள பரசுரெடிப்பாளையம் – எஸ் மேட்டுப்பாளையம் இடையே மலட்டாற்றில் இன்று சிறுவர் சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது இரு சிறுமிகள் ஆற்றில் அடித்து சென்றுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகே குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் நீச்சல் அடித்துக்கொண்டு சென்று அந்த இரு சிறுமிகளை பத்திரமாக மீட்டு கரை திரும்பினார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன

  • Rape complaint against famous actor சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!