வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு… திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் : ஜிகே வாசன் பேட்டி!!
Author: Babu Lakshmanan4 October 2021, 7:42 pm
தென்காசி : தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுகவை ஆதரித்து தமிழ் மாநில கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. எனவே திமுக பொய் பிராச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரை நவம்பரில் பள்ளிகள் திறக்கபடும் என்ற முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம். பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், எனவும் பேசினார். இந்நிகழ்ச்சியில் முக்கிய தமமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0
0