வருடந்தோறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க நடவடிக்கை : மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…

Author: kavin kumar
20 January 2022, 9:29 pm
Quick Share

மதுரை : தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் வருடந்தோறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே.வாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் ” கொரோனா 3 ஆம் அலை மிக வேகமாக பரவிகொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா குறைய கூடிய சூழல் இல்லை. எனவே மக்கள் அலட்சியப்படுத்த கூடாது என்றும், மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும், குடியரசு தின அலங்கார வாகன ஊர்தி விவகாரத்தில் இராணுவ அமைச்சகம் உண்மை நிலையை கூறி உள்ளதாகவும், அலங்கார ஊர்தி இல்லை என்பதால் தியாகம், வரலாற்றை மறைக்க முடியாது என்றும்,

தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் வருடந்தோறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பொங்கல் பரிசில் உள்ள குறைகளை தமிழக அரசு சரி செய்ய வேண்டும், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் நடத்தும் போராட்டம் கண்டிக்தக்கது என்றும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையினை மத்திய அரசு வழங்க வேண்டும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடன் தமிழ் மாநில காங்கிரஸ் நிலைப்பாடு கூறப்படும் என்றும், தற்போது அதிமுக கூட்டணியில் சமூக நிலைப்பாட்டில் இருக்கின்றோம்” என தெரிவித்தார்.

Views: - 333

0

0