போட்ரா வெடிய…. 4வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைவு : கிராம் ரூ.4,200க்கு கீழ் சரிந்தது…!!!

5 March 2021, 12:14 pm
Gold-Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மளமளவென குறைந்தது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த வாரத்தை கிடுகிடுவென உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, இன்று 4வது நாளாக சரியத் தொடங்கியது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.36 சரிந்து ரூ.4,181க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 150

0

0