தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் விலை : இன்றும் ரூ.136 அதிகரிப்பு

30 January 2021, 11:02 am
Gold-Updatenews360
Quick Share

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த வாரம் சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்வுடனே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.4,655 க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0

1 thought on “தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் விலை : இன்றும் ரூ.136 அதிகரிப்பு

Comments are closed.