லாக்டவுனில் மகிழ்ச்சியான செய்தி : தங்கம் விலை இன்று ரூ.320 சரிவு…!!

4 June 2021, 10:58 am
Gold_Jewellery_Updatenews360
Quick Share

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 75.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 75,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 595

0

0