தங்கம் விலை சரிவு..! ரூ. 31,000-க்கு கீழ் சரிந்ததே ஆச்சர்யமா இருக்கு.. இந்த வாரத்துல இதுதான் பெஸ்ட்..!

11 February 2020, 11:52 am
Gold - updatenews360
Quick Share

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக தங்கத்தின் மதிப்பு மற்றும் தங்கத்தின் வர்த்தகம் திகழ்ந்து வருகிறது. மேலும், பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக, தங்கம் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ரூ. 30,000-க்கு அதிகமாகவே விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, இன்று சற்று சரிந்துள்ளது.

இன்று காலை நேர வர்த்தகப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைந்து ரூ. 30,952-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் மீண்டும் ரூ. 31,000-த்திற்கு குறைவாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 22 சரிந்து ரூ. 3,869 ஆக விற்பனையாகிறது. இதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ. 50,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் சரிந்து ரூ. 49.80-க்கு வர்த்தகமாகிறது.