நகை வாங்க நினைக்கிறவங்க இப்பவே கிளம்புங்க : சவரன் மீண்டும் ரூ.35 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது..!!

25 February 2021, 4:23 pm
gold - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்து காணப்பட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் தங்கம் ரூ.20 சரிந்து ரூ.4,393க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.20க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலையும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.34,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.41 சரிந்து ரூ.4,372க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 519

0

0