எனக்கு இப்பவே தலைசுத்துது.. இன்றும் ரூ.232 அதிகரித்த தங்கம் விலை..!!

6 November 2020, 11:24 am
gold-updatenews360-1-1
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்தே காணப்பட்டுள்ளது.

அதாவது, இன்றைய காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.38,712க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,839-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ. 69க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 28

0

0

1 thought on “எனக்கு இப்பவே தலைசுத்துது.. இன்றும் ரூ.232 அதிகரித்த தங்கம் விலை..!!

Comments are closed.