4 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை : இன்று மட்டும் ரூ. 328 அதிகரிப்பு..!
25 September 2020, 12:03 pmதொடர்ந்து 4 நாட்களாக ஏறி வந்த தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது
அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஏற்றத்துடன் தங்க வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில், வாரத்தில் 4 நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.41 சரிந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,700 குறைந்து ரூ. 57,700-க்கு வர்த்தகமாகி வருகிறது.