விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை: ஒரே நாளில் ரூ.608 உயர்வு…அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

7 April 2021, 5:33 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை: கடந்த வாரங்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இதன்பிறகு விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி மீண்டும் 34 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.34,672க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.76 உயர்ந்து ரூ.4,334க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.70.90 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.70,900 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0