ஓடும் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை பறிப்பு… கைவரிசை காட்டிய சக பயணி… 19 சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமிக்கு வலைவீச்சு..!

Author: Babu Lakshmanan
30 June 2022, 4:28 pm
Quick Share

மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பூமதி என்பவர் உறவினர் திருமணத்தில் பங்கேற்க தந்தை மற்றும் அவரது சகோதரர் உடன் ஷேர் ஆட்டோவில் ஆரப்பாளையத்தில் சென்று கொண்டிருந்தா. அப்போது, வழியில் இரண்டிற்கும் மேற்பட்ட பயணிகள் ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏ ஏ சாலையில் இறங்கிய பின்னர், பூமதி தன் பையை சோதனை செய்தபோது, கைப்பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த பூமதி உடனடியாக மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 168

0

0