பாசனத்திற்காக வரும் அக்.,1ம் தேதி முதல் கோமுகி நதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு

29 September 2020, 7:57 pm
gomuhki dam - updatenews360
Quick Share

சென்னை : வரும் 1ம் தேதி முதல் கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலம்‌ வட்டம்‌, கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021-ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட விவசாயப்‌ பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. விவசாயப்‌ பெருமக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌, பழைய பாசன நிலங்கள்‌ 5,860 ஏக்கரும்‌, புதிய பாசன நிலங்கள்‌ 5,000 ஏக்கரும்‌, ஆக மொத்தம்‌ 40,860 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து வரும் 1ம் தேதி முதல்‌ தண்ணார்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

மேலும்‌, விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.