மலைப்பாதையில் பழுதடைந்து நின்ற அரசு பேருந்து : 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு.. மாணவிகள், பொதுமக்கள் அவதி!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2022, 8:38 pm
Kodai Bus Repeair -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் இருந்து வில்பட்டி செல்லக்கூடிய சாலையில் அரசு பேருந்து சாலை நடுவே பழுதான காரணத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இங்கு வருகிறது .

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சென்ற அரசு பேருந்து ஒன்று வில்பட்டி செல்லக்கூடிய பிரதான சாலையில் நடுவே பழுதடைந்து நின்றுள்ளது . அரசு பேருந்து நடு சாலையில் பழுதடைந்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர் .

மேலும் வில்பட்டி பிரதான சாலை முதல் நாயுடுபுரம், பள்ளங்கி சாலை வரை சுமார் நான்கு கிலோமீட்டர் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் செல்லக்கூடிய மாணவிகளும் தொடர்ந்து கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர் .

இதனால் நீண்ட தூரம் மாணவிகள் நடந்து செல்லும் நிலையானது ஏற்பட்டது . தொடர்ந்து பணிக்கு செல்லும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர் .

Views: - 367

0

0