அரசுப் பேருந்து மோதி சாலையில் நடந்து சென்ற பெண் பலி : பதை பதைக்க வைத்த காட்சி!!

30 November 2020, 2:46 pm
Viruthunagar Accident - Updatenews360
Quick Share

விருதுநகர் : பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியதில் விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பாவாலி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 44). இவர் நேற்று மாலை விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியேறும் பகுதியில் உள்ள சந்திப்பு அருகே நடந்து வந்தார்.

அப்போது, அவருக்கு எதிரே வந்த அரசுப் பேருந்து வலது புறம் திரும்பும் போது பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் மோதி கீழே விழுந்தார். விழுந்த அவரின் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்தார் தகவல் அறிந்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் மகாலட்சுமியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்பு மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பப்பட்டவர் செல்லும் வழியில் மகாலட்சுமி உயிரிழந்தார். அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து உண்டான பேருந்தை கைப்பற்றியும் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி பதிவும் வெளியாகி உள்ளது. இதில் மகாலட்சுமி நடந்து செல்வதும் கீழே விழுவதும் பின்பு பேருந்தின் பின்புற சக்கரம் அவர் மீது ஏறி இறங்குவதும் காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

Views: - 0

0

0