கடும் பனியால் பாதை தெரியாமல் பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து : வனப்பகுதியில் சிக்கித் தவித்த பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 1:02 pm
Bus Upset - Updatenews360
Quick Share

பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி. இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாக உள்ளது.

இப்பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 5 15 மணிக்கு அரசு பேருந்து சிறுமலை நோக்கி சென்றுள்ளது.

பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார் இயக்கியுள்ளார். சேகர் என்பவர் நடத்துனராக உள்ளார். இந்நிலையில் பேருந்து சிறுமலையை நோக்கிச் சென்ற பொழுது சிறுமலை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு மற்றும் தூறல் காரணமாக சாலை முற்றிலும் தெரியவில்லை.

இதன் காரணமாக பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் நடத்தினர் உட்பட சிறுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், பழனி அம்மாள், கோபால், பாஸ்கரன், கார்த்தி, கணேசன் உட்பட 16 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர் விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 324

0

0