பழைய இரும்பு கடைக்கு போடப்பட்ட அரசின் விலையில்லா சைக்கிள்கள்… முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை..!!

Author: Babu Lakshmanan
22 April 2023, 12:47 pm

கொடைக்கானலில் அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட சைக்கிள்களை பழைய இரும்பு கடைக்கு போடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் மாணவிகளுக்கு வழங்கிய சைக்கிள்களை கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்று பழைய இரும்பு கடைக்கு போடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சைக்கிள்களில் தமிழக அரசு முத்திரை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா அவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்த பிரச்சனை குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?