ஆதிதிராவிடர் நலவிடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ; 5 பள்ளி மாணவிகள் படுகாயம்…!!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 10:40 am

பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பள்ளி மாணவிகள் மற்றும் சமையலர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் ஆதி திராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 22 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மாணவிகள் உணவு அருந்துவதற்காக காத்திருந்தபோது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பள்ளி மாணவிகள் மற்றும் சமையலர் அபிராமி (50) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: கச்சத்தீவில் காங். துரோகம்! வைகோவால் கலக்கத்தில் ‘இண்டி’ கூட்டணி!

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் நளினி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் சமையலர் அபிராமி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வேட்பாளரின் Mobile நம்பரை வாக்காளர்களுக்கு கொடுத்த அண்ணாமலை.. பரப்புரையில் சுவாரஸ்யம்!

பழனி அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மேற்கூரை மோசமாக இருந்ததை ஆதிதிராவிடர் நல விடுதி ஊழியர்கள் மாவட்ட கல்வித்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, பழனி கோட்டாட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விடுதியை தற்காலிகமாக பூட்டினர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!