தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு : 10ஆம் வகுப்பு தேர்ச்சியானால் போதும்!!

4 September 2020, 5:15 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கீழ் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கும் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் வேலைவாய்ப்பிற்கு விளம்பர அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் தேவை என்றும், விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதி விற்பனையாளராக விண்ணபிப்பவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 101 காலிப்பணியிடங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பாக தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் சென்று அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விற்பனையாளர்களின் சம்பள விபரம் ரூ.4,300ல் இருந்து 12 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.3900 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த எழுது முறை தேர்வுகள் இல்லாமல் நேர்முகத் தேர்வில் மட்டுமே தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல விற்பனையாளர்கள் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மற்றும் கட்டுநர் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0