மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் தவித்த அரசுப் பள்ளி மாணவர் : கல்விச் செலவை ஏற்ற கோவை காவல் ஆய்வாளர்!!

21 November 2020, 5:27 pm
Sastha - Updatenews360
Quick Share

கோவை : அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர் ஒருவருக்கு கோவை மாநகர காவல் ஆய்வாளர் கட்டணத்தை ஏற்றுள்ளார்.

கோவை மாநகர காவல்துறையின் பணிபுரிந்து வரும் சாஸ்தா சோமசேகரன் தற்போது விடுப்பில் உள்ளார், இவர் தனது முகநூல் பக்கத்தில் மருத்து கல்லூரியில் சேரும் ஏழை மாணவரின் கல்வி கட்டணத்தை ஏற்பதாக பதிவிட்டுள்ளார்.

Image may contain: 1 person, close-up

அரசு பள்ளியில் படித்து மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவரின் கல்விக் கட்டணத்தை ஏற்பதாகவும் உதவி தேவைப்படும் மாணவர்கள் 9655209000 என்று எண்ணில் தன்னை தொடர்பு கொள்ளுமாறு பதிவு செய்தார்.

அரசு மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் உதவி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதை ஏற்று கோவை மாநகர காவல் ஆய்வாளர் சாஸ்தா சேமசேகரன் ஒரு மாணவரின் கல்விச் செலவை ஏற்பதாக பதிவிட்டிருந்தார். ஏற்கனவே இவரும் இவருடைய சகோதரர் சாஸ்தா இந்து சேகரனும் காங்கேயம் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன சிறுவர்கள் 6 பேரின் கல்விக்கு உதவி புரிந்து வருவது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0