7 பேர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு : அமைச்சர் சிவி சண்முகம்..

6 November 2020, 3:25 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் : 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் . மத்திய அரசின் கொரானா விதிமுறைகளுக்கு உட்பட்டே பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் தேவையான அளவு உரம், விதைகள் கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 5,398 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரானா காலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் இணைப்பு பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்., “7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் கொரானா விதிமுறைகளுக்கு உட்பட்டே பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது என்றார்.

மேலும் ஜிஎஸ்டி வரியை நாட்டில் அறிமுகப்படுத்திய காங்கிரஸ் – திமுக தலைமையிலான கூட்டணி தான். அதிமுக அரசு செய்த சாதனைகளை திமுகவின் போராட்டத்தால் கிடைத்த வெற்றி போல் ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை வழங்கினால் அதனை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Views: - 40

0

0