ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் கபட நாடகம் : மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்!!

5 February 2021, 5:58 pm
Rajiv case condemns- Updatenews360
Quick Share

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்தார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Image result for vaiko

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கைகோ, தமிழக ஆளுநரின் முடிவுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163 (1) -இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது அநீதியாகும். மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக ஆளுநரும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போல ஆளுநர் எழு பேர் விடுதலைக்கான உத்தரவு வெளியிட அனுமதியளித்திருக்க வேண்டும். சட்ட வல்லுனர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விசாரித்த தலைமை காவல் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த குரலில் ஏழு பேர் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

Image result for indian communist party

ஆனால் ஆளுநரோ 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்று கூறியிருப்பது மக்கள் உணர்வை அவமதிப்பது, சட்ட நெறிமுறைகளை அத்துமீறுவது, மனிதாபிமானமற்ற அரக்கத்தனமானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆளுநரின் இந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஏழு பேர் விடுதலையை இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து உடனடியாக நிறைவுற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Views: - 0

0

0