ஆடு திருடிய பட்டதாரி இளைஞர்கள்! வாகன சோதனையில் சிக்கினர்!!
30 September 2020, 10:19 amதிருப்பூர் : மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடுகளை திருடிய பட்டதாரி இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லூரை சேர்ந்த விவசாயி பழனிசாமி தனது வீட்டின் முன்பாக தனது ஆட்டினை மேய்க்கவிட்டிருந்தார். மோட்டார் பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் ஆட்டினை தூக்கி சென்றனர்.
பெருமாநல்லூர் நால்ரோட்டில் பகுதிக்கு வந்த அவர்களிடம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆடு திருடியது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கூடலூரை சேர்ந்த ஷாஜகான், நீலகிரியை சேர்ந்த சீனோய்பேபி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இருவரும் பட்டதாரி வாலிபர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து எட்டாயிரம் மதிப்புள்ள ஆடு மற்றும் மோட்டார்பைக் பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.