தாத்தாவின் இறப்புக்குச் சென்ற பேத்தி: சாலை விபத்தில் பலியான கொடூரம்: மயானத்தில் தகனம்….!!

Author: Sudha
11 August 2024, 9:01 am

மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ முருகானந்தம். இவரது மகள் லாவண்யா 23. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் லாவண்யாவின் தாத்தா பிரமியப்பன் மதுரையில் காலமானார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மதுரை அண்ணாநகரை சேர்ந்த நண்பர் யுவராஜ் 24, உடன் டூவீலரில் நேற்று வந்தார்.

அதிகாலை 5:00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே எரமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று மாலை தத்தனேரி மயானத்தில் தாத்தா, பேத்தி இருவர் உடலும் தகனம் செய்யப்பட்டது.

தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்தியும் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?