டாப் டக்கர் பாடலுக்கு டாப் டக்கராக நடனம் ஆடிய பாட்டி – வைரலாகும் வீடியோ

26 February 2021, 1:42 pm
Quick Share

டாப் டக்கர் பாடலுக்கு பேரன் உடன் பாட்டி ஆடும் அசத்தல் வீடியோ, இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் விரைவில் கலக்க உள்ள படத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளனர். இந்த படத்தின் தமிழ் பாடலை, விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். விக்னேஷ் சிவன் என்றால் யாரென்று கேட்கிறீர்களா? நம்ம் நயன்தாராவோட காதலரே தான்…
டாப் டக்கர் என்று துவங்கும் பாடல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை, ஜோனிதா காந்தி பாடியுள்ளார். இந்த பாடல், தற்போது இளைய தலைமுறையினரின் ஆந்தம் ஆகவே மாறியுள்ளது எனலாம்.

https://www.instagram.com/reel/CLeWV0lDA0C

தமிழகத்தை சேர்ந்த அக்ஷய் பார்த்தா, தனது பாட்டியுடன் இணைந்து பாடலுக்கு நடன அசைவுகளை செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதேபோல், தற்போது டாப் டக்கர் பாடலுக்கும் பாட்டி உடன் சேர்ந்து நடனமாடி, அதை வீடியோவாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த வீடியோ, பெரும்வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு, பாட்ஷாவே பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த வீடியோவை பகிர்ந்து, பாட்டி , நீங்கள் தான் என் டாப் டக்கர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வீடியோ, இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரால் தொடர்ந்து பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Views: - 219

1

0