மச்சினிச்சியை திருமணம் செய்ய தடையாக இருந்த பாட்டி கொலை : பேரன் தலைமறைவு!!

2 November 2020, 12:25 pm
Murder - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மனைவியின் பதினாறு வயது தங்கையை மணக்க தடையாக இருந்ததால் மூதாட்டியை பழி தீர்க்க கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் கமலம் (வயது 65). இவர் கணவர் இறந்த நிலையில்
தனது மூத்த மகளான குமாரபுரம் அருகே பெருஞ்சிலம்பு பகுதியில் வசித்து வரும் ராஜம் (வயது 45) என்பவர் வீட்டில் தனியாக கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.

தினமும் மலைப்பகுதிகளில் விறகு வெட்டும் பணிக்கு சென்று திரும்பும் அவர் இன்று காலை விறகு வெட்டும் பணிக்கு வீட்டில் இருந்து வெளியே திரும்பும் போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் அந்த மூதாட்டியை மிதித்து வீட்டிற்குள் தள்ளி விட்டதோடு அவரது கழுத்தில் தான் கையில் கொண்டு வந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூதாட்டி கமலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அங்கே வந்த உறவினர்கள் இதுகுறித்து கொற்றிகோடு போலுசாருக்கு தகவல் கொடுத்தனர. தகவல் அறிந்து அங்கே வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மூதாட்யை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியதால், சடலத்தை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியை கொலை செய்தது அவரது மூத்த மகளான ராஜம் என்பவரது மூத்த மகளான மாரியம்மாள் (25) என்பவரது கணவர் ராஜா(30) என்பது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் மாரியம்மாளும் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா(30) என்பவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் ஏழு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர வேண்டும் என்று கடந்த இரண்டு மாதங்களாக தொடர் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக தெரிய வந்த நிலையில் தப்பியோடிய ராஜாவை தேடி வரும் போலீசார் 18-வயதுக்கு முன்பே ராஜாவை திருமணம் செய்து கொண்ட மாரியம்மாளையும் அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையை திருமணம் செய்ய வைக்க கோரி தனது மனைவியை இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக கேரளாவில் வைத்திருந்த ராஜா, நேற்றிரவு சொந்த ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர கேட்டு விரக்த்தியில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான குற்றவாளி ராஜாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 53

0

0