தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சூப்பரான செய்தி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 7:11 pm
Anbil Mahesh - Updatenews360
Quick Share

நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில்,நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும், விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நவ.1 முதல் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.ஏனெனில்,மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலே பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தீபாவளி முடிந்து வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம்.மேலும், அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் போது, சுழற்சி முறையில் வகுப்புகள் எடுத்தாக வேண்டும். வகுப்பறைகளில் மட்டுமின்றி பேருந்துகளில் வரும் போதும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 487

0

0