திருமணம் நடக்க இருந்த சில மணி நேரங்களில் மணமகன் மாயம்… சினிமா பாணியில் ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2025, 10:47 am

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசூராபாத் ரங்காபூர் பகுதியைச் சேர்ந்த மதுகர் ரெட்டி சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஹுசுராபாத் மண்டலம் காட்ரப்பள்ளியைச் சேர்ந்த மதுமிதாவிற்கு 16ம் தேதி காலையில் திருமணம் செய்ய பெரியோர்கள் உறவினர்கள் முன்னிலையில் ஏற்கனவே நிச்சயதார்த்தமும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். உறவினர்கள் , நண்பர்கள் வருகையுடன் வியாழக்கிழமை மாலை திருமணத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் கேக் வெட்டி இருவரும் ஊட்டி கொண்ட நிலையில் போட்டோ சூட் எடுத்து கொண்டனர். திருமணத்திற்கு சில மணி நேரமே இருந்த நிலையில் இரவோடு இரவாக மதுகர் ரெட்டி மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார்.

மணமகன் அறையில் இருப்பான் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்
திருமணம் நேரம் நெருங்கியதால் நலங்கு வைக்க மணமகன் மதுகர் ரெட்டி அறைக்கு சென்று பார்த்தபோது மதுகர் ரெட்டி இல்லை. இதனால் மண்டபத்தில் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

Groom disappears hours before wedding stopped

இந்த நிலையில் மதுகர் ரெட்டி வேறு பெண்ணை கோயிலில் திருமணம் செய்து கொண்டு அந்த போட்டோவை பெற்றோருக்கு அனுப்பி தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ்அப்பில் அனுப்பினார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

Groom stop marriage and Escape With his Girl Friend

மதுமிதா குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தம் செய்யும்போது ₹ 40 லட்சம் மதிப்புள்ள அரை ஏக்கர் நிலம், 15 சவரன் நகை மற்றும் வரதட்சணையாக ₹ 6 லட்சம் பணம் வழங்கப்பட்டதாகவும் அவற்றை திருப்பி தர வேண்டும் என கேட்டனர்.

ஆனால் மதுகர் ரெட்டி தந்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி தனது மகனுக்கு ஆதரவாக பேசி திரும்ப தர முடியாது என்ன செய்ய முடியுமா செய்து கொள்ளுங்கள் எனக் கூறி உள்ளார்.

இதனால் மதுமிதா பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள மதுக்கரைத் தேடி வருகின்றனர்.

  • The film that was supposed to star with Sivaji… The superstar missed the opportunity..!! சிவாஜியுடன் நடிக்க வேண்டிய படம்… வாய்ப்பை தவற சூப்பர் ஸ்டார்..!!
  • Leave a Reply