திருச்சியில் கோவில் முன்பு கிடந்த துப்பாக்கி மற்றும் குண்டுகளால் பரபரப்பு : வருவாய்துறையினர் தீவிர விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 9:42 pm
Gun Rescue - Updatenews360
Quick Share

திருச்சி : கோவிலுக்கு முன்பு கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி மாரியம்மன் கோவில் முன்பு கை துப்பாக்கி கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியினர் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவயிடத்துக்கு வந்த ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறையினர் கை துப்பாக்கியை கைப்பற்றி ஆய்வு செய்து, அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்து திருச்சி துப்பாக்கி பராமரிப்பு பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்து, கை துப்பாக்கியின் ரகம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உறையுடன் கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை விட்டு சென்றது யார், வேட்டைக்காக பயன்படுத்தபட்டதா என்பது குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் முன்பு துப்பாக்கி கிடக்கும் சம்பவமறிந்து சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 176

0

0