விளைநிலத்தில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!
1 December 2020, 4:27 pmதிருப்பத்தூர்: ஆம்பூர் அருகே விளைநிலத்தில் புகுந்த மலைப்பாம்பை பிடித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாச்சியார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி விநாயகம். இவரது விளைநிலத்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட விவசாயி விநாயகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சுமார் 9 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பார்த்த பொதுமக்களும் இளைஞர்களும் அதனை பத்திரமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து, ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இரவு நேரமாக இருந்தாலும் அப்பகுதி மக்கள் மற்றும் கிராம மக்கள் பலர் பார்த்து வியந்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு பத்திரமாக வெள்ளக்கல் காப்புகாட்டுபகுதியில் விடப்பட்டது.
0
0