ஸ்டாலினுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த அனுமன் சேனை கட்சி : ஸ்லேட் மற்றும் வாய்ப்பாடு புத்தகம் ‘பார்சல்‘!!

By: Udayachandran
2 January 2021, 4:14 pm
Tirupur Stalin -Updatenews360
Quick Share

மதுரை : திமுக ஸ்டாலினுக்கு கணக்குப் போடத் தெரியவில்லை என்று ஸ்லேட், வாய்ப்பாடு புத்தகத்தை அனுமன் சேனை கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொங்கல் பரிசு 2500ரூபாய் கொடுப்பதை ஆதரித்தும் மற்றும் அதோடு 1,500 ரூபாய் கொடுத்து மொத்தம் 5000ரூபாயாக வழங்குமாறு மக்கள் முன்னிலையில் ஸ்டாலின் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரல் ஆனது.

அவருக்கு கணக்கு சரியாக தெரியவில்லை என்று உணர்த்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் ஸ்லைம் மற்றும் வாய்ப்பாடு புத்தகத்தை தபால் மூலம் அண்ணா அறிவாலயத்திற்கு அனுமன் சேனா கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

முதல்வர் ஆக ஆசைப்படும் ஸ்டாலின் இனியாவது மக்களிடையே சரியாக பேச வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பாடு புத்தகம் மற்றும் எழுத்து பலகையை அனுப்பி நூதனமான முறையில் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

Views: - 94

0

0