தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

6 July 2021, 4:45 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, உள் தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றம் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

chennai metrology - updatenews360

ஜூலை 7ம் தேதி தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Rain - Updatenews360

இன்று முதல் 10ம் தேதி வரை வங்க கடல் பகுதிகளான தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 120

0

0