கோவையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 11:02 am
Quick Share

கோவை: கோவையில் நள்ளிரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி உள்ளது. மேலும் காலையில் பணிக்கு செல்வோர் குடைகளை பிடித்தவாறு உக்கடம், காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து சென்றனர்.

Views: - 340

0

0