கனமழையால் உடைந்தது உப்பளம் : கோடிக்கணக்கில் நஷ்டம் ; அரசு நிவாரணத்தை எதிர்பார்க்கும் உப்பள தொழிலாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
16 November 2021, 12:59 pm
salt - updatenews360
Quick Share

கன்னியாகுமரி சாமிதோப்பில் உப்பளத்தில் வெள்ளப்பெருக்கால் உடைப்பு ஏற்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

சாமிதோப்பு அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் ஒன்று உள்ளது. இந்த உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 200க்கும் மேற்பட்டோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வரும் தொடர்மழையால், இந்த உப்பளத்தில் உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,அதிலிருந்து வெளியேறிய மழைவெள்ளம் நேற்று உப்பளத்தில் புகுந்தது.

இதனால் உப்பளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஆறு போல் காட்சியளித்தது. மேலும் உப்பளத்தில் உள்ள உப்புநீர் வெளியேறி சகதிகள் படிந்தது. உப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் மோட்டார்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே, உப்பள தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 362

0

0