தமிழகத்திற்கு அலர்ட்…8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!!
Author: Aarthi Sivakumar9 August 2021, 11:08 am
சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழையும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0
0