ஆதாரமில்லாம பேசாதீங்க : பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் ”குட்டு”!!

1 February 2021, 6:51 pm
HC Advice Udhayanithi - Updatenews360
Quick Share

பொள்ளாச்சி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகனை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரகின்றனர். அந்த வகையில் திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி திமுக இஞைரணிச் செயலாளராக உள்ள உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகனை தொடர்புப்படுத்தி பேசினார்.

இதையடுத்து தன்னை தொடர்புப்படுத்தி பேசி தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திய உதயிநிதி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், இனிமேல் உதயநிதி ஸ்டாலின் தன்னை தொடர்பு படுத்தி பேச இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு குறித்த விசாணை இன்று நடந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசுவது அவரது பெயருக்கு உதயநிதி களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ பொள்ளாச்சி ஜெயராமன் பெயரையோ அவரது குடும்பத்தினரையோ குற்றம்சாட்டாத நிலையில் உதயநிதி இப்படி ஆதாரமின்றி வெளியில் பேசுவது தவறு என்றும், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது உதயநிதி இந்த செயலில் ஈடுபடமாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உதயநிதி வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டு, உதயநிதிக்கு அட்வைஸ் பண்ணுங்க என கூறினார்.

இதையடுத்து பொதுவவெளியில் இதுபோன்ற கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் பேசமாட்டார் என வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்ததையடுத்து வழக்கில் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து மார்ச் மாதம் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Views: - 0

0

0