‘நீலகிரியில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள்’: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

By: Aarthi
15 September 2021, 5:51 pm
Quick Share

சென்னை: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீலகிரியில் சட்டவிரோத கட்டுமானங்களை வரன் முறைப்படுத்த வேண்டும் எனக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். விடுமுறை காலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு, அங்கு தங்கி உள்ளனரா என்பதை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும். நீலகிரியில், சட்டவிரோத ரிசார்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 85

0

0