6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்

By: Babu
15 September 2021, 1:52 pm
Anbil Mahesh Poyyamozhi- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- பள்ளிகளில் மாணவர்கள் வருகை உள்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளோம். கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதால், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்.,30ம் தேதி முடிவெடுத்து முதலமைச்சர் அறிவிப்பார், என தெரிவித்துள்ளார்.

Views: - 159

0

0

Leave a Reply