வண்டலூர் பூங்காவில் ஹிமாலயன் கரடி உயிரிழப்பு : பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் நிர்வாகம்…!

Author: kavin kumar
6 February 2022, 4:07 pm

காஞ்சிபுரம் : வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 3 ஆம் தேதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி உயிரிழந்ததாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே கரடி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!