”இந்து கடவுள் இராமன் ஒரு அயோக்கியன்” : விசிக பிரமுகர் விக்ரமனின் சர்ச்சை ட்விட்.. வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 7:51 pm

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து, யூடியூப் சேனலில் அரசியல் விவாதம் நடத்தியவர் விக்ரமன். நடுநிலை, எந்த கட்சியும் சாராதவர் என தன்னை காட்டிக் கொண்டு அரசியல் விவாதங்களில் பல கட்சிகளை சேர்ந்தவர்களையும், கட்சி சாரா பிரமுகர்களிடமும் பேட்டி எடுத்தவர்.

Vikraman R on Twitter: "திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் அழைப்பை  ஏற்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் விவாதத்துக்கு வரும்பட்சத்தில் அதனை ...

இந்த நிலையில் விசிக கட்சியில் சேர்ந்த அவருக்கு மாநில இணை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பதவி வகித்தது முதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

தற்போது அவருடைய ட்விட்டர் பதிவில், இராமன் இராவணனை வீழ்த்தியதும் முதலில் சீதையை போய் பார்க்காமல் விபீடணனுக்கு முடி சூட்டிக் கொண்டிருந்தான். பின்னர் துணைவி என்றும் பாராமல் அவள் தூய்மையானவள் என்பதை நிரூபிக்க தீயில் இறங்க சொன்னான். அதிகார வெறிபிடித்த, ஆணாதிக்க அயோக்கியன் தான் இராமன் என பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் புனிதமான பண்டிகையான ராமநவமி தினம் துவங்கும் நாளன்று இந்த பதிவை பதிவிட்டுள்ளார். ராமன் பிறந்த நாளை ராம நவமி தினமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பங்குனி கடைசி முதல் சித்திரை முதல் வாரம் வரை இந்த தினம் கடைப்பிடிக்கப்படும்.

இந்துக்களின் கடவுளை கொச்சைப்படுத்தும் விதமாக விக்ரமன் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். ராமன் அயோக்கியன் என்ற சொல்ல உனக்கு தகுதியில்லை என நெட்டிசன்கள் சாட்டையடி கொடுத்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!