திராவிடம் எனும் வார்த்தை சொல்பவர்கள் அனைவரும் தமிழ் விரோதி தான் : ஹெச் ராஜா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 8:59 pm
H Raja -Updatenews360
Quick Share

திமுக குடும்பம் அனைவரும் CBSC பள்ளிக்கூடங்கள் வைத்துவிட்டு தமிழைத் தவிர அனைத்து மொழிகளையும் கற்றுக்கொடுக்கின்றனர் என எச். ராஜா விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருகைதந்த எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஆங்கிலம் பயன்படுத்தும் இடத்தில் இந்தி பயன்படுத்தலாம் என்று தான் கூறினார்கள்
தமிழ் பயன்படுத்தும் இடத்தில் ஹிந்தி பயன்படுத்தலாம் என்று கூறினார்களா என்று திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.

திராவிடம் எனும் வார்த்தை சொல்பவர்களே அனைவரும் தமிழ் விரோதி தான் என்று குறிப்பிட்டார் அதுமட்டுமல்லாமல் தமிழ்மொழியை அழித்ததே திமுக தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பற்றி திமுக போராட்டம் நடத்தினால் என்னுடைய முதல் உண்ணாவிரத போராட்டம் வேளச்சேரியில் உள்ள சன் சயின்ஸ் பள்ளியிலிருந்து தொடங்கும் என்று தெரிவித்தார்.

திமுக குடும்பத்தில் உள்ளவர்கள் CBSC பள்ளிக்கூடங்கள் வைத்துவிட்டு தமிழைத் தவிர அனைத்து மொழிகளையும் கற்று கொடுப்பதாக கூறினார்.

Views: - 540

0

0