பெண்களை பற்றி இழிவாக பேசிய திருமா மீது புகார் : இந்து முன்னணியினர் மனு!

24 October 2020, 1:41 pm
Hindu Munnani - Updatenews360
Quick Share

கோவை : இந்து பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அன்னையர் முன்னணி சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் கோவை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் அம்பிகா தலைமையிலான அமைப்பினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமூக வலைத்தளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் சனாதன தர்மத்தின்படி இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஒருவித சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்து மதத்தை பற்றியும் இந்துக்கள் பற்றியும் துன்புறுத்தும் விதமாக பேசிய தொல் திருமாவளவன் மீதும் அந்த வீடியோவை பதிவிட்ட பெரியார் டிவி என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனு அளிக்கும் போது இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட தொண்டர்கள் உடனிருந்தனர்.

Views: - 40

0

0