தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : உங்க மாவட்டமும் உள்ளதா?

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 8:29 pm
School Leave - Updatenews360
Quick Share

ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் அறிவித்த முதல் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பிரதான கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நாளை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 5 மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 205

0

0