மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் குறித்து ஹாலிவுட் நடிகையின் பதிவு..!வியப்பில் ரசிகர்கள்..!

Author: Vignesh
7 October 2022, 11:43 am

கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன்.

நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது. பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ.500 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் படக்குழுவும் படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.

உலக அளவில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவரும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் வைரலாகப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் நடிகையான இவர் பொன்னியின் செல்வன் சூப்பர் என கமெண்ட் போட ரசிகர்கள் பலரும் அந்த டுவிட்டிற்கு லைக்ஸ் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!