‘பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக மீண்டும் ஒரு திருநங்கை’ – யார் இந்த ஷிவின் கணேசன்..? முழு விவரம் உள்ளே..!

Author: Vignesh
7 October 2022, 10:53 am
Quick Share

சின்னதிரையில் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. ‘பிக்பாஸில் ஏன் கலந்து கொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து விஜய் டிவிக்கு அனுப்பி வைத்ததில், பரிசீலித்து அவர்களில் சிலர் தேர்வாகி இருப்பதாக நம்பக தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

எந்த சீசனிலும் இதுவரை இப்படி ஒரு வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட வில்லை. என்பதால் இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கோரன்டைன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 இன்னும் இரண்டு நாள்களில் (அக்டோபர் 9 ஆம் தேதி) பிரமாண்டமாகத் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல்வேறு தகவல் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஷிவின் கணேசன் என்பவர் போட்டியாளராகக் கலந்துகொள்ளப் போவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த பிக்பாஸ் 5 வில் முதல் முறையாகத் திருநங்கை நமிதா போட்டியாளராகக் கலந்துகொண்டார். பல்வேறு காரணங்களால் பாதியில் வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே, அவரை போலவே தற்போது பிக்பாஸ் 6ல் திருநங்கை ஷிவின் கணேசன் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இவர் மிகவும் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவின் கணேசன் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் வீட்டுக்கு ஒரே பையனாக இருந்த நிலையில், வீட்டில் இவரது உணர்வுக்கு, விருப்பத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், வேலை தேடி சிங்கப்பூர் சென்று சில ஆண்டுகள் அங்கிருந்து விட்டு மீண்டும் இந்தியா வந்த நிலையில், இவரை இவரது தாய் ஏற்க மறுத்ததாகவும், இதுவரை இவர் அவரை சந்திக்கவே இல்லை என்பதும் தெரியவருகிறது.

ஹெச்.சி.எல் நிறுவனத்திலும் சில ஆண்டுகள் பணிபுரிந்த இவர், பிக் பாஸ் போட்டியில் தான் பங்கேற்பதைப் பார்த்து இதுவரை பேசாத அம்மா, தன்னிடம் பேசுவார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதோ அவரின் புகைப்படம்..

View this post on Instagram

A post shared by Shivin (@shivinganesan)

Views: - 160

0

0