கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் : பிறந்த சிசுவின் உயிருக்கு ஆபத்து.. துரித நேரத்தில் சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 12:58 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகள்.

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நசீமா பேகத்துக்கு பிரசவவலி ஏற்பட்டது.

இதனால் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் எடை குறைந்து குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவர்களுடன் இருந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சல்மான்கான் மற்றும் மருத்துவ உதவியாளர் பரத் ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தாய் மற்றும் குழந்தையை பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருததுவமனையில் சேர்த்தனர்.
துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?