வீடு தேடி மருத்துவம் என்பது பெருநகரங்களுக்கு மட்டுமே : கரூர் ஆட்சியரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
24 August 2021, 2:58 pm
Quick Share

சென்னை : வீடுதேடி சென்று தடுப்பூசி என்கின்ற திட்டம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே என்று கரூர் ஆட்சியர் கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசின் 100 நாள் சாதனை தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள சுவரொட்டிகளை அறிமுகப்படுத்தியதோடு, அதனை வெளியிட்டு பின்னர் 100 நாள் சாதனை ஸ்டிக்கர் எனப்படும் ஒட்டுவில்லைகளையும் அறிமுகப்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- கரூர் மாவட்டத்தில் மட்டும், வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில்மையம், மாற்றுத்திறனாளிகள் துறை என்று 37 துறைகளின் சார்பில் பல கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும், சரி மாநிலங்களிலும் சரி, நமது கரூர் தான் முன்னோடி, எனக் கூறினார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்கும் சரி, கபசுரகுடிநீர் என்பது ஒருகண் துடைப்புக்கு கூட கிடையாது என்று கேட்டதற்கு மற்றும் வெப்பமாணி கொண்டு சோதிப்பது கிடையாது என்று கேட்டதற்கு, “அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழில்மிகு அரசு அலுவலகங்கள் என்ற முறையில் மாநில அரசு வழிகாட்டுதலின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் புதர்மண்டிகிடப்பது முதல் மோசமான நிலையில் உள்ள அனைத்து அலுவலகங்களின் லிஸ்ட் எடுத்து வருகின்றோம். கண்கொள்ளா கரூர் என்கின்ற பெயரில் நடைமுறைக்கான உத்தேசத்தில் உள்ளோம். அதே போல, நீங்கள் சொன்ன விஷயத்தினையும் நாங்கள் கவனித்து வருவதோடு, அதை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினார்.

பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் கரூர் காந்திகிராமம் கே.கே.நகர் பகுதியில் 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அங்கு சுமார் 17 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டும், கரூர் நகராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை அங்கே எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை , அந்த பகுதியில் சிறிய அளவில் குளோரின் பவுடர்களை மட்டுமே வீசியுள்ளனர் என்று கூறியதற்கு, அதற்கு மாவட்ட ஆட்சியர், கரூர் நகராட்சியுடன் இணைந்து தடுப்புஎநடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

வீடுதேடி வரும் மருத்துவம் என்கின்ற திட்டம் இருக்கும் போது கூட, கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நடக்க கூட முடியாத நிலையில், அவர்களை அவர்களது உறவினர்கள் தூக்கி கொண்டு வந்து கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடும் நிலை உருவாகியுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு தெளிவாக உங்களுக்கு சொல்கின்றேன். நம்முடைய 38 மாவட்டத்தில், மிக மிக குறைந்த மாவட்டத்தில் நாம் முன்னோடியான மாவட்டம் ஆகும். ஆனால் வீடுதேடி தடுப்பூசி திட்டம் என்பது சென்னை மாதிரியான பெருநகரத்திற்கு மட்டும் தான் என்றும், நம்முடைய மாவட்டத்தில் மட்டும் ஏன் ? வீடு தேடி சென்று போடக்கூடாது என்றால் ஒன்றிய அரசு (மத்திய அரசு) வழிகாட்டுதலின்படி தானே, தவிர, Reaction என்கின்றது வந்து விட்டால், அருகிலேயே ஆம்புலன்ஸை வைத்து கொண்டு தான் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட முடியும்.

குறிப்பாக இதை நான் சொல்ல கூடாது அனைத்து மாவட்டங்களில் சரி, மிக மிக குறைவாக தான் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், நம்முடைய கரூர் மாவட்டத்தில் மட்டும் தான் 60 சதவிகித விழுக்காடு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மீதம் இருக்கும் 40 சதவிகித நபர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை, அதையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து வருகின்றது. நீங்கள் சொல்லும் கருத்துகளை நாங்கள் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார்.

மேலும்,  மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தொகுதியிலேயே கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு மதுபானக்கடைகளில் சரி, கடைகளுக்கு வெளியே மதுப்பிரியர்கள் மதுக்களை வாங்கி கொண்டு அங்கேயே அருந்துவதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் குடிமகன்களிடம் சிரமப்படுவதாக கூறியதற்கு, அதையும் காவல்துறை மற்றும் கலால்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
ஊரக வளர்ச்சி முகமை மூலம் 2248 பணிகள் ரூபாய் 83.30 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தில் 8,692 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதி உதவி மற்றும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 721 பயனாளிகளுக்கு ரூபாய் 5.26 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு நிதியாக 2976 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.34 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையின் மூலம் 1350 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 15.58 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

Views: - 563

0

0