“எனக்கு பிரியாணி வேணும்“ : கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்!

25 August 2020, 11:38 am
Karur Biriyani - Updatenews360
Quick Share

கரூர் : பிரியாணி கிடைக்காத ஆத்திரத்தால் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உருட்டுக்கட்டையால் பொருட்களை அடித்து உடைத்த திமுக பிரமுகர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அது என்னமோ தெரியலங்க பிரியாணிக்கும் திமுகவினருக்கும் 7ஆம் பொறுத்தமாவே இருக்கு. பிரியாணியை விரும்பி சாப்பிடாதவங்க இருக்கவே முடியாது. ஆனால் இப்ப பிரியாணினு பேர கேட்டாலே திமுக ஞாபகம்தா வருது. பிரியாணி, திமுக விட்டு பிரியாத ஆணி னே சொல்லலாம். அப்படித்தான் மறுபடியும் பிரியாணி வச்சு ஒரு சம்பவம் நடந்திருக்கு.

கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் அதே பகுதியில் கரூர் பிரியாணி சென்டர் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடை வியாபாரத்தை முடித்து கடையை மூடிக் கொண்டு இருந்தபோது, தெற்கு காந்திபுரம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 32) என்பவர் தனக்கு பிரியாணி வேண்டும் என்று குடிபோதையில் கேட்டுள்ளார்.

அதற்கு கிருஷ்ணன் பிரியாணி தீர்ந்துவிட்டது கடையை மூட போகிறோம் என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் குடிபோதையில் அவரை திட்டிவிட்டு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி சென்றவர் தனது தம்பி யுவராஜ் (வயது 28) என்பவருடன் மீண்டும் பிரியாணி கடைக்கு வந்துள்ளார்.

அப்போது கடை பூட்டப்பட்டு இருந்ததால் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா, டியூப்லைட், சிக்கன் கிரில் பாக்ஸ் ஆகியவற்றை உருட்டு கட்டையால் அடித்து உதைத்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணன் பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் பக்கத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது கார்த்திகேயன் மற்றும் யுவராஜ் பிரியாணி கடையை அடித்து உடைத்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கார்த்திகேயன் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் என்பதும் தற்போது திமுக வில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கரூரில், பிரியாணி கடையை அடித்து உடைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 18

0

0